செய்திகள்

கொல்கத்தா கோர்ட்டில் முகமது ஷமி மனைவி வீடியோ வாக்குமூலம்

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமியின் மனைவி, கொல்கத்தா கோர்ட்டில் வீடியோ வாக்குமூலம் கொடுத்துள்ளார். #HasinJahan #Shami

மாலை மலர்

இதையடுத்து ஷமியும், அவரது தாய், சகோதரன் ஆகியோரும் தன்னை துன்புறுத்தி வருவதாகவும், கணவரின் குடும்பத்தார் தன்னை கொலை செய்ய கூட முயற்சித்ததாகவும் கடந்த 8-ம்தேதி கொல்காத்தாவில் உள்ள லால்பசார் காவல்நிலையத்தில் ஹசின் ஜகான் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் ஷமி மற்றும் அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மீது கொடுமைப்படுத்துதல், மிரட்டுதல், துரோகம், குடும்ப வன்முறை போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இதனடிப்படையில் நேற்று கொல்கத்தா போலீசார் உத்தர பிரதேசத்தில் உள்ள முகமது ஷமியின் வீட்டிற்குச் சென்று விசாரணை நடத்தினார்கள்.

இந்நிலையில் ஹசின் ஜகான் இன்று அவரது வக்கீல் உடன் கொல்கத்தாவில் உள்ள அலிபுர் கோர்ட்டிற்கு வந்தார். அப்போது கோர்ட்டின் உத்தரவுபடி ஜுடிசியல் மாஜிஸ்திரேட் முன்னிலையில் தனது வாக்குமூலத்தை அளித்தார். அவரது வாக்குமூலம் கேமராவில் பதிவு செய்யப்பட்டது.