செய்திகள்

டி20-க்காக நியூசிலாந்து அணி ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுகிறார் மெக்கிளேனகன்

டி20 லீக் தொடர்களில் விளையாடுவதற்காக நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் மெக்கிளேனகன் அணி ஒப்பந்தத்தில் இருந்து விலகுகிறார்.

மாலை மலர்

தென்ஆப்பிரிக்காவில் நடைபெற இருக்கும் புதிய குளோபல் டி20 லீக் தொடருக்கான டர்பன் அணியில் மெக்கிளேனகன் இடம்பிடித்துள்ளார். மேலும் பிக் பாஷ் லீக் தொடரிலும் விளையாட விரும்புகிறார். இதனால் நியூசிலாந்து அணியின் மத்திய ஒப்பந்தத்தில் இருந்து தன்னை விடுவிக்கும்படி கேட்டுக்கொண்டார். இதற்கு நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் சம்மதம் தெரிவித்துள்ளார்.

தென்ஆப்பிரிக்காவில் நடைபெற இருக்கும் புதிய குளோபல் டி20 லீக் தொடர் டிசம்பர் 16-ந்தேதி முடிவடைகிறது. இந்த தொடர் முடிந்த அடுத்து மூன்று நாட்கள் கழித்து பிக் பாஷ் தொடங்குகிறது.