செய்திகள்

பகுஜன் சமாஜ் கட்சி மூத்த தலைவர் நீக்கம் - மாயாவதி நடவடிக்கை

சட்ட மேல்சபை எதிர்க்கட்சித் தலைவரான நசிமுதீன் சித்திக் முறைகேடுகளில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அவரை கட்சியை விட்டு நீக்கி மாயாவதி நேற்று அதிரடி நடவடிக்கை எடுத்தார்.

மாலை மலர்

உத்தரபிரதேச மாநிலத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர், நசிமுதீன் சித்திக். சட்ட மேல்சபை எதிர்க்கட்சித் தலைவரான இவர் மிரட்டிப் பணம் பறித்தல் உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும், இதனால் கட்சிக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து அவரை கட்சியை விட்டு நீக்கி மாயாவதி நேற்று அதிரடி நடவடிக்கை எடுத்தார். அவரது மகன் அப்சல் சித்திக்கும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.