செய்திகள்

மேத்யூசின் வருகையால் நம்பிக்கை அதிகரித்துள்ளது: இலங்கை கேப்டன் சன்டிமால்

ஏஞ்சலோ மேத்யூசின் வருகை எங்களது பேட்டிங் வரிசையை பலப்படுத்தியுள்ளது என இலங்கை கேப்டன் சன்டிமால் கூறியுள்ளார்.

“ஏஞ்சலோ மேத்யூசின் வருகை எங்களது பேட்டிங் வரிசையை பலப்படுத்தியுள்ளது. அவர் 4-வது வரிசையில் பேட் செய்வார். அவரது அனுபவம் எங்களுக்கு சாதகமாக இருக்கும். அவர் தனது மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று நம்புகிறோம். ஆனால் பின்னங்கால் காயத்தில் இருந்து மீண்டு வந்திருக்கும் அவர் ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமே இடம் பெறுவார். காயப் பிரச்சினையால் துரதிர்ஷ்டவசமாக அவரால் டெஸ்டில் பந்து வீச முடியாதது, எங்களுக்கு சற்று பின்னடைவு தான்.

கொல்கத்தாவில் கடைசியாக நாங்கள் விளையாடிய தொடரில்(ஒரு நாள் போட்டி) வேகப்பந்து வீச்சை திறம்பட சமாளித்தோம். பவுன்ஸ் ஆகக்கூடிய ஆடுகளத்தில் சிறப்பாக விளையாடும் நம்பிக்கையில் இருக்கிறோம். நல்ல தொடக்கம் அமைவது அவசியம். குறிப்பாக டாப்-4 பேட்ஸ்மேன்கள் அதிக ரன்கள் எடுக்க வேண்டும்”

SCROLL FOR NEXT