செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் பிடிபி கட்சி பிரமுகர் மீது துப்பாக்கிச்சூடு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் குல்காம் மாவட்டத்தில் பிடிபி கட்சி பிரமுகர் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். #JammuKashmir

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தை சேர்ந்தவர் அப்துல் மஜித் தர். மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த இவர், இன்று மாலை வீட்டின் அருகே மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டார்.

இதில் படுகாயம் அடைந்த அவரை உறவினர்கள் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #JammuKashmir

SCROLL FOR NEXT