ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகளில் வியட்நாமின் ஹோ சீ மின்ஹ் நகரில் நடைபெற்று வருகிறது.
இன்று நடைபெற்ற 48 கிலோ எடைப்பிரிவின் அரையிறுதி போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை மேரிகோம், ஜப்பானின் டிசுபாசா கோமுராவை எதிர்கொண்டார். இப்போட்டியின் தொடக்கத்திலிருந்து இருவரும் நிதானமாக தற்காப்பு ஆட்டத்தையே விளையாடினர்.
இரண்டாவது ரவுண்டில் இருந்து மேரி கோம் அதிரடியாக குத்துக்களை விட்டார். அவரை சமாளிக்க முடியாமல் டிசுபாசா திணறினார். இறுதியில் 5-0 என்ற கணக்கில் மேரிகோம் டிசுபாசாவை துவம்சம் செய்தார். வெற்றி பெற்ற மேரிகோம் இறுதி போட்டிக்கு முன்னேறினார்.