ஹனோய்:
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகளில் வியட்நாமின் ஹோ சீ மின்ஹ் நகரில் நடைபெற்று வருகிறது.
இன்று நடைபெற்ற 48 கிலோ எடைப்பிரிவின் காலிறுதி போட்டியில் இந்திய வீராங்கனை மேரிகோம், சீன தைபே வீராங்கனை மெக்-சீயி பின்னை எதிர்கொண்டார். இப்போட்டியின் தொடக்கத்திலிருந்து இருவரும் நிதானமாக தற்காப்பு ஆட்டத்தையே விளையாடினர். இருப்பினும் கடைசி சுற்று ஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய் மேரிகோம் வெற்றி பெற்று அரையிறுதி போட்டிக்கு முன்னேறினார். இதன்மூலம் அவர் பதக்கம் வெல்வது உறுதியாகி உள்ளது.
சோனியா லாதர்
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகளில் மேரிகோம், இதுவரை நான்கு தங்கமும், ஒரு வெள்ளியும் வென்றுள்ளார். மேரிகோம் அரையிறுதி போட்டியில் ஜப்பானின் சுபாசா கொமுராவை எதிர்கொள்ள இருக்கிறார்.
57 கிலோ எடைப்பிரிவில் சோனியா லாதரும், 51 கிலோ எடைப்பிரிவில் நீரஜும் காலிறுதி போட்டிக்கு தகுதிபெற்றனர். 81 கிலோ எடைப்பிரிவில் கலந்துகொண்ட பூஜா ராணி முதல் சுற்றிலேயே வெளியேறினார்.
நீரஜ்