செய்திகள்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போட்டியில்லை

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடவில்லை என அக்கட்சியின் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

மாலை மலர்

சென்னை:

சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் அடுத்த மாதம் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க. சார்பில் மதுசூதனன், தி.மு.க. சார்பில் மருதுகணேஷ் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும், ஏற்கனவே ஆர்.கே.நகரில் கடந்த முறை தேர்தல் அறிவிக்கப்பட்டபோது வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டவர்கள்.

பா.ம.க. மற்றும் தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிவிட்டன. காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி திமுகவுக்கு ஆதரவு அளித்துள்ளன. ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது நிலைப்பாட்டை அறிவிக்காமல் இருந்தது.

இந்நிலையில், கோவையில் இன்று நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில நிர்வாகக் குழு கூட்டத்தில், ஆர்.கே.நகர் தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது, ஆர்.கே.நகரில் போட்டியிடுவதில்லை என்று முடிவு செய்யப்பட்டது.