புதுடெல்லி:
மாருதி சுசுகி நிறுவனத்தின் நெக்சா பிரான்டு கார் சர்வீஸ் அனுபவத்தை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் புதிய மற்றும் முதல் சர்வீஸ் மையத்தை திறந்துள்ளது. இதைத் தொடர்ந்து நாடு முழுக்க 30 இடங்களில் சர்வீஸ் சென்டர்களை துவங்க நெக்சா திட்டமிட்டுள்ளது.
நெக்சா ஷோரூம் போன்ற அனுபவத்தை வழங்கும் நோக்கில் புதிய சர்வீஸ் சென்டர் கட்டமைக்கப்பட்டுள்ளது. இத்துடன் கார் சர்வீஸ் செய்யப்படுவதை வாடிக்கையாளர்கள் காணும் படி கண்ணாடிளால் ஆன சுவர் பொருத்தப்பட்டுள்ளது. இதுதவிர சர்வீஸ் மையத்தில் வைபை வசதி மற்றும் நெக்சா வாகனங்களின் முழு சிறப்பம்சங்களை விளக்கும் விசேஷ வீடியோக்களை எல்இடி வாயிலாக திரையிடப்படுகிறது.
ஒருவேலை வாடிக்கையாளர் தங்களது காரை சர்வீஸ் மையத்தில் விட்டு செல்ல விரும்பினால். மை நெக்சா செயலியை ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்து கார் சர்வீஸ் செய்யப்படுவதை வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்போன் மூலம் நேரலையில் காணும் வசதியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புதிய சர்வீஸ் சென்டர் வழக்கமான ஆட்டோமொபைல் சர்வீஸ் சென்டர் போன்று இல்லாமல், தலைசிறந்த உள்கட்டமைப்பு கொண்டிருக்கிறது. புதிய சர்வீஸ் மையம் கார் சர்வீஸ் அனுபவத்தை முற்றிலும் மாற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
நெக்சா கார் சர்வீஸ் செய்வோர் ஆன்லைன் அல்லது செயலி மூலம் முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு முன்பதிவு செய்த பின் வாடிக்கையாளர் நெக்சா சர்வீஸ் மையத்தில் காரை ஒப்படைக்கலாம். கார் சர்வீஸ் சென்டரில் இருந்து திரும்ப பெறும் போது, காரில் செய்யப்பட வேண்டியவற்றை நெக்சா அதிகாரிகள் பரிந்துரை செய்து, அதற்கான தோராய தொகையும் அறிவிக்கின்றனர்.
இதேபோன்று
நெக்சாவின் முதல் சர்வீஸ் சென்டர் குர்கிராம் பகுதியில் துவங்கப்பட்டுள்ள நிலையில் 2020-ம் ஆண்டிற்குள் 300 நெக்சா சர்வீஸ் மையங்களை துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.