செய்திகள்

திருமண பதிவு சட்டத் திருத்த மசோதா சட்டசபையில் தாக்கல்

சட்டசபையில் இன்று தமிழ்நாடு திருமண பதிவு சட்ட திருத்த மசோதாவை அமைச்சர் சி.வி.சண்முகம் தாக்கல் செய்தார்.

மாலை மலர்

2009-ம் ஆண்டு திருமண பதிவு சட்டத்தின்படி திருமணம் செய்து கொண்ட தேதியில் இருந்து 90 நாட்களுக்குள் அதற்கான கட்டணத்தை செலுத்தி பதிவு செய்ய வேண்டும்.

தாமதம் ஆனால் மேலும் 60 நாட்களுக்குள் உரிய அபராத கட்டணம் செலுத்தி பதிவு செய்யப்பட வேண்டும். ஆனால் தற்போது சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் 150 நாட்களைக் கடந்த பிறகும் திருமணங்களை பதிவு செய்ய வழிமுறை காணுமாறு அறிவுறுத்தி உள்ளது.

மேலும் சிறப்பு நிகழ்வுகளை தவிர பதிவாளர் முன்பு திருமணம் செய்து கொண்டவர்கள் நேரில் வராமல் திருமணம் பதிவு செய்யக்கூடாது என்று இருக்கிறது. எனவே அதற்கு ஏற்ப இந்த சட்டத்தில் திருத்தம் செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.