செய்திகள்

திருமணம் நிச்சயிக்கப்பட்ட புதுமாப்பிள்ளை தற்கொலை

கோவை கவுண்டம் பாளையத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவை:

கோவை கவுண்டம் பாளையம் பாலாஜி கார்டன் பகுதியை சேர்ந்தவர் வேணுகோபால். இவரது மகன் திலிபன் (27). இவர் மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

இவருக்கும் துடியலூரை சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற இருந்தது. இதற்காக திருமண பத்திரிகையும் அச்சடிக்கப்பட்டது.

நேற்று மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை திடீரென திலிபன் மாயமானார். அவரை செல்போனில் தொடர்பு கொண்ட போது எடுக்கவில்லை.

வீட்டில் உள்ள ஒரு அறைக்கு சென்று பார்த்த போது அங்கு திலிபன் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். அவரை கீழே இறக்கி கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.