தற்கொலை 
செய்திகள்

மாரண்டஅள்ளி அருகே தொழிலாளி தற்கொலை

மாரண்டஅள்ளி அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

பாலக்கோடு:

தர்மபுரி மாவட்டம் அ.மல்லாபுரம் பகுதியை சேர்ந்தவர் மாதையன் (வயது 40). தொழிலாளியான இவர் மனைவியை பிரிந்து தனது அக்காள் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி தகவல் அறிந்த மாரண்ட அள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.