வாலிபர் கடத்தல் 
செய்திகள்

மாரண்டஅள்ளி அருகே லாரி உரிமையாளரின் மகனை கடத்திய 5 பேர் கைது

மாரண்டஅள்ளி அருகே லாரி உரிமையாளரின் மகனை காரில் கடத்திய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள சொக்கன்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் நாராயணன், லாரி உரிமையாளர். இவருடைய மகன் பரமேஷ் (வயது 23). இவரை நேற்று முன்தினம் மர்ம நபர்கள் காரில் கடத்தி சென்றனர். பின்னர் அவரை சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அந்த மர்மநபர்கள் காரில் இருந்து இறக்கிவிட்டு சென்றுவிட்டனர். இதுகுறித்து மாரண்டஅள்ளி போலீசில் நாராயணன் புகார் செய்தார்.