கடைக்கு சீல் 
செய்திகள்

மரக்காணத்தில் தரமற்ற குடிநீர் விற்ற கடைக்கு சீல்

மரக்காணம் அருகே தரமற்ற குடிநீர் விற்ற கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

மரக்காணம்:

மரக்காணம் பேரூராட்சி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு கடையில் குடிநீர் கேன்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இங்கு தரம் குறைந்த தண்ணீர் விற்கப்படுவதாகவும், மருந்து வாசனை வருவதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் மரக்காணம் தாசில்தார் ஞானம் மற்றும் அதிகாரிகள் அந்த கடைக்கு சென்று ஆய்வு செய்ததில், கேன்களில் தண்ணீர் பச்சை நிறத்தில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கிருந்த 20 லிட்டர் கொள்ளளவுள்ள 13 கேன்களை பறிமுதல் செய்து, அந்த கடைக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

SCROLL FOR NEXT