விபத்து பலி 
செய்திகள்

மரக்காணம் அருகே அரசு பஸ் மோதி விவசாயி பலி

மரக்காணம் அருகே அரசு பஸ் மோதி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

மரக்காணம்:

மரக்காணம் அருகே கீழ்புத்துப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பச்சையப்பன் (வயது 30). விவசாயி. இவர் நேற்று இரவு மரக்காணம் பகுதியில் வேலையை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் கீழ்புத்துப்பட்டு கிராமத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார். கிழக்கு கடற்கரை சாலையில் அனுமந்தை டோல்கேட்டில் அருகே சென்றபோது, புதுவையில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த பச்சையப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துபோனார். இது குறித்து மரக்காணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.