ராய்ப்பூர்:
ஒடிசா மாநிலம் மால்கன்கிரி மாவட்டத்தில் மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் இருப்பதாக சிறப்பு அதிரடி படையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அங்கு சென்ற அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
பாதுகாப்பு படையினரைக் கண்டதும் அங்கு பதுங்கியிருந்த மாவோயிஸ்ட்கள் துப்பாக்கியால் சுடத்தொடங்கினர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாதுகாப்பு படையினரும் சரமாரியாக சுட்டனர்.
இந்த தாக்குதலில் மாவோயிஸ்ட் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும், இந்த துப்பாக்கிச் சூட்டில் பாதுகாப்பு படைவீரர் ஒருவர் பலியானார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.