விவசாயி தாக்குதல் 
செய்திகள்

மானூர் அருகே விவசாயியை தாக்கியவர் கைது

மானூர் அருகே விவசாயியை தாக்கியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

மானூர்:

மானூர் அருகே உள்ள மேலப்பிள்ளையார்குளத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 32). விவசாயி. இவருக்கும், இவருடைய சித்தப்பா வேல்சாமி (57) என்பவருக்கும் இடையே பூர்வீக சொத்து சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வருகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று ரமேஷ் தனது வீட்டின் முன்பு நின்றுகொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த வேல்சாமி, அவருடைய மகன்கள் நாராயணராஜ், மகேந்திரன் ஆகியோர் ரமேசை கம்பால் சரமாரியாக தாக்கினர். இதில் காயம் அடைந்த அவர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேல்சாமியை கைது செய்தனர். நாராயணராஜ், மகேந்திரன் ஆகியோரை தேடி வருகின்றனர்.