வட அமெரிக்க கண்டத்தில் உள்ள சிறிய தீவுநாடான கியூபாவில் சுமார் ஒரு கோடியே 15 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். அந்நாட்டின் அதிபராக பிடல் காஸ்ட்ரோ ஆட்சி செய்தபோது 1976-ம் ஆண்டில் பிரதமர் பதவி ஒழிக்கப்பட்டது. அவருக்கு பின்னர் அதிபராக பதவியேற்ற ரவுல் காஸ்ட்ரோ காலத்திலும் இதேநிலை நீடித்தது.
இந்நிலையில், 43 ஆண்டுகளாக வழக்கொழிக்கப்பட்ட பிரதமர் பதவிக்கு மீண்டும் உயிரூட்டும் வகையில் 24-2-2019 அன்று கியூபா பாராளுமன்றத்தில் புதிய அரசியலமைப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டது.