செய்திகள்

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியின் 10 மீ ஏர் பிஸ்டலில் மனு பேகர் தங்கப்பதக்கம் வென்றார்

மெக்சிகோவில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் உலகக்கோப்பை போட்டியின் 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை மனு பேகர் தங்கப்பதக்கம் வென்றார். #ISSFWC #ManuBhaker

சர்வதேச சூட்டிங் ஸ்போர்ட்ஸ் பெடரேசன் சார்பில் நடத்தப்படும் துப்பாக்கி சுடுதல் உலகக்கோப்பை தொடர் மெக்சிகோவின் கவுடலஜாரா நகரில் நடைபெற்று வருகிறது. 

இதில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை மனு பேகர் தங்கப் பதக்கம் வென்றார். இவர் 237.5 புள்ளிகள் பெற்றார்.

மெக்சிகோவின் அலெஜந்திரா 237.1 புள்ளிகள் பெற்று வெள்ளி பதக்கம் வென்றார். பிரான்சின் செலின் கோபர்வில்லி 217 புள்ளிகள் பெற்று வெண்கல பதக்கம் வென்றார். இந்தியாவின் யாசஷ்வினி சிங் 196.1 புள்ளிகளுடன் 4-வது இடத்தை பிடித்தார்.

ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர் ஷஹ்சார் ரிஸ்வி தங்கப் பதக்கம் வென்றதுடன் உலக சாதனையும் படைத்தார். இதே போட்டியில் இந்தியாவின் முன்னணி வீரர் ஜித்து ராய் 219 புள்ளிகள் பெற்று வெண்கல பதக்கம் வென்றார். #ISSFWC #ISSFShootingWorldCup

SCROLL FOR NEXT