மானூர் அருகே மேலப்பிள்ளையார்குளத்தை சேர்ந்தவர் தலைமலை. அவருடைய மனைவி பேச்சியம்மாள் (வயது 48). இவர் நேற்று தனது மூத்த மகன் திவாகரனுடன் (20) மோட்டார் சைக்கிளில் நெல்லைக்கு புறப்பட்டார். செல்லும் போது தண்ணீர் ஊற்றி வைக்கக்கூடிய பிளாஸ்டிக் டிரம் ஒன்றையும் எடுத்துச் சென்றுள்ளனர். ரஸ்தா அருகே சென்றபோது பலத்த காற்று வீசியுள்ளது.
இதனால் எதிர்பாராதவிதமாக பிளாஸ்டிக் டிரம்முடன் பேச்சியம்மாள் தூக்கி வீசப்பட்டு ரோட்டில் விழுந்தார். இதில் அவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மானூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.