விபத்து பலி 
செய்திகள்

மானூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெண் பலி

மானூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை:

மானூர் அருகே உள்ள தெற்கு பட்டியை சேர்ந்தவர் அய்யம்மாள் (வயது45). இவர் நேற்று முன்தினம் தனது உறவினருடன் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து நெல்லையில் இருந்து மானூர் நோக்கி சென்றார்.

அப்போது அவர்கள் எதிர்பாராத விதமாக வேகத்தடையில் செல்லும் போது நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதில் பலத்த காயம் அடைந்த அய்யம்மாள் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.