விசாரணை ஆணையத்தில் முன்னாள் எம்.பி. வக்கீல் மனோஜ் பாண்டியன் ஆஜராக வந்தபோது எடுத்த படம். 
செய்திகள்

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் மனோஜ் பாண்டியன் ஆஜர்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தில் அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன் ஆஜரானார்.

மாலை மலர்

சென்னை:

ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தி வருகிறது. நேற்று ஜெயலலிதாவின் சமையல்கார பெண் ராஜம்மாள் ஆஜராகி விளக்கம் அளித்தார். அவரிடம் 2 மணி நேரம் விசாரணை நடந்தது.

இதையடுத்து இன்று காலை 10.30 மணியளவில் அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன் நீதிபதி ஆறுமுகசாமி முன்னிலையில் ஆஜரானார். ஜெயலலிதாவின் மரணம் குறித்து அவர் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியதோடு நீதிபதி கேட்ட கேள்விகளுக்கும் விளக்கம் அளித்தார். நீதி விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தவரும் மனோஜ் பாண்டியன் ஆவார்.

விசாரணை ஆணையத்தில் நாளை ஜெயலலிதாவின் கார் டிரைவர் அய்யப்பன் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவர் நாளை ஆஜராகும்பட்சத்தில் அவரிடமும் பல்வேறு கேள்விகளை எழுப்ப ஆணையம் தயாராக உள்ளது. #Tamilnews