சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் வீசப்பட்ட பெட்ரோல் குண்டு பாட்டில்கள். 
செய்திகள்

மன்னார்குடியில் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் பெட்ரோல் குண்டுகள் வீச்சு

மன்னார்குடியில் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாலை மலர்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மன்னை நகர் ராமானுஜ நகரில் வசித்து வருபவர் சதாசிவம். குற்றப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

இவரது வீட்டில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் மர்ம ஆசாமிகள் 2 பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு தப்பி சென்று விட்டனர் இதில் ஒரு குண்டு வீட்டு வாசலிலும் மற்றொரு குண்டு திண்ணையிலும் விழுந்து தீப்பிடித்தது. இதில் வீட்டின் முன் பக்க கதவு சேதம் அடைந்தது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

பெட்ரோல் குண்டு வீசப்பட்டது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் சதாசிவம் மன்னார்குடி போலீசில் புகார் செய்தார். மன்னார்குடி டி.எஸ்.பி. அசோகன், இன்ஸ்பெக்டர் கழனியப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடதினார்கள்.

திருவாரூரில் இருந்து கைரேகை நிபுணர்களும் வந்து ஆய்வு நடத்தினார்கள். போலீஸ் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.

சேதமடைந்த வீட்டு முன் பக்க கதவு.