மின்சாரம் தாக்கி பலி 
செய்திகள்

மன்னார்குடி அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

மன்னார்குடி அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

மன்னார்குடி:

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள சேரன்குளம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது35). இவர் நேற்று இரவு தனது வீட்டில் ஏற்பட்ட மின் பழுதை சரி செய்தபோது மின்சாரம் தாக்கியது. இதையடுத்து அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் மணிகண்டன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மன்னார்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.