மின்சாரம் தாக்கி பலி 
செய்திகள்

மன்னார்குடி அருகே மின்சாரம் தாக்கி முதியவர் பலி

மன்னார்குடி அருகே மின்சாரம் தாக்கி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மன்னார்குடி:

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்துள்ள பாமணி கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 60). விவசாயி. நேற்று காலை இவர் அதே பகுதியில் உள்ள டீ கடைக்கு சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது சாலையோரம் மின்சார கம்பி அறுந்து கிடந்துள்ளது. இதனை அறியாத அவர் மின்சார கம்பியை ஓரமாக எடுத்து போட முயன்றார். அப்போது எதிர்பாராதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே சுந்தரமூர்த்தி இறந்தார். இதுகுறித்து மன்னார்குடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.