மன்மோகன் சிங் 
செய்திகள்

நெஞ்சுவலியால் ஆஸ்பத்திரியில் அனுமதி- மன்மோகன்சிங் உடல்நிலை தேறுகிறது

நெஞ்சுவலியால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்மோகன்சிங் உடல்நிலை தேறி வருவதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

மாலை மலர்

முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான மன்மோகன்சிங் நெஞ்சுவலி காரணமாக நேற்று இரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். 

இதைத்தொடர்ந்து மன்மோகன்சிங் உடல்நிலை தேறி வருவதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும் அவரது உடல்நிலை தொடர்பாக மருத்துவ வட்டாரம் சார்பில் கூறும்போது, “மன்மோகன்சிங் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படவில்லை. அவருக்கு சாதாரண அறையிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல் நிலை நன்றாகவே உள்ளது. ஆனாலும் கண்காணிப்பு தேவைப்படுவதால் அவர் மருத்துவமனையில் இருக்கிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மன்மோகன்சிங் கடந்த 2010-ம் ஆண்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்தான் அறுவை சிகிச்சை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.