வெடிவிபத்து ஏற்பட்ட இடம் 
செய்திகள்

வெடி விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் - மாணிக்கம் தாகூர் எம்பி

வெடி விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று மாணிக்கம் தாகூர் எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.

மாலை மலர்

விருதுநகர்:

மாணிக்கம் தாகூர் எம்.பி. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மதுரை மாவட்டம் செங்குளம் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பேர் பலியான சம்பவம் வேதனை அளிக்கிறது. இறந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். காயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். பட்டாசு தொழிலாளர்கள் பாதுகாப்பான முறையில் பணி செய்யும் வகையில் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பட்டாசு தொழிலாளர்களை பாதுகாக்கும் பொறுப்பு அரசுக்கு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.