செய்திகள்

மாங்காடு அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை-பணம் கொள்ளை

மாங்காடு அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை-பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பூந்தமல்லி:

மாங்காடு அடுத்த முகலிவாக்கம் லட்சுமி நகர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் பிரகாஷ். தி.நகரில் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று மாலை வீட்டை பூட்டி விட்டு நந்தனத்தில் உள்ள உறவினர் விட்டிற்கு குடும்பத்தினருடன் சென்றார்.

பின்னர் இரவு வீடு திரும்பிய போது முன்பக்க கீரில் கேட் மற்றும் மரகதவு உடைக்கப்பட்டு இருந்தது. பீரோவில் இருந்த 6 பவுன் தங்க நகை மற்றும் ரூ. 80 ஆயிரம் ரொக்கம் கொள்ளை போனதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுக் குறித்து மாங்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறார்கள்.

SCROLL FOR NEXT