புதுடெல்லி:
மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் இளைய மகன் சஞ்சய் காந்தி 23-6-1980 அன்று டெல்லி சப்தர்ஜங் விமான நிலையத்தின் அருகே புதிய விமானம் ஒன்றை ஓட்டிக் கொண்டிருந்தார்.
தனது அலுவலகத்தின் மேலே விமானத்தில் சுற்றிவந்தபோது, விமானம் கட்டுப்பாட்டை இழந்து, கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் சஞ்சய் காந்தி உயிரிழந்தார்.
இந்நிலையில், அவரது நினைவுநாளான இன்று டெல்லியில் உள்ள சஞ்சய் காந்தி நினைவிடத்தில் அவரது மனைவி மேனகா காந்தி, மகன் வருண் காந்தி ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.