ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகே உள்ள ஓடைத்தோப்பு மெயின் ரோட்டில் இன்று காலை 50 வயது மதிக்கத்தக்க 2 பெண்கள் ரோட்டோரத்தில் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது கோவில் வாடியில் இருந்து வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் 2 பெண்கள் மீதும் மோதியது.
இதே வேகத்தில் அருகில் இருந்த மலைராஜ் என்பவரின் பெட்டிக்கடை மீதும் வாகனம் மோதியது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 2 பெண்களும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்கள். பெட்டிக்கடையில் யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. விபத்து நடந்த சில நொடிகளிலேயே அந்த வாகனம் அங்கிருந்து தப்பியது.
விபத்து குறித்து தகவல் அறிந்த மண்டபம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 2 பேரின் உடல்களையும் மீட்டு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், இறந்த 2 பேரில் ஒருவர் கீழக்கரையைச் சேர்ந்த வளர்மதி (வயது 55) என்றும், மற்றொருவர் அதே பகுதியைச் சேர்ந்த பழ வியாபாரம் செய்து வந்த பெண் எனவும் தெரியவந்துள்ளது.