இதுகுறித்து எவெர்ட்டன் கிளப்புடன் மான்செஸ்டர் யுனைடெட் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இந்நிலையில் எவெர்ட்டன் கேட்கும் டிரான்ஸ்பர் பீஸ்-ஐ கொடுக்க மான்செஸ்டர் யுனைடெட் சம்மதம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மான்செஸ்டர் யுனைடெட் அணி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் ‘‘ரொமெலு லூகாகுவின் மெடிக்கல் மற்றும் தனிப்பட்ட விஷயம் உள்ளடக்கிய டிரான்ஸ்பர் ஒப்பந்தத்திற்கு எவெர்ட்டனுடன் உடன்பாடு எட்டியுள்ளது என்பதை தெரிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்’’ என்று குறிப்பிட்டுள்ளது.
24 வயதாகும் பெல்ஜியம் வீரர் ரொமெலு லூகாகு-யின் டிரான்ஸ்பர் தொகையாக எவெரட்டனுக்கு சுமார் 625 கோடி ரூபாய் கொடுக்க இருக்கிறது மான்செஸ்டர்.