கோப்புபடம் 
செய்திகள்

மணப்பாறையில் ஊரடங்கில் பறிமுதலான வாகனங்கள் விடுவிப்பு

மணப்பாறையில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நடைபெற்று வருகிறது.

மணப்பாறை:

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மே 3-ந்தேதி வரை அமலில் உள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் 25-ந்தேதி முதல் ஊரடங்கு உத்தரவையும் மீறி வெளியில் சுற்றித் திரிந்த வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதேபோல் திருச்சி மாவட் டம், மணப்பாறை, வையம்பட்டி, புத்தாநத்தம், துவரங் குறிச்சி, வளநாடு ஆகிய காவல் நிலைய எல்லைக்குட் பட்ட பகுதிகளிலும் போலீ சார் வாகனங்களைபறிமுதல் செய்தனர்.

இதையடுத்து தமிழக அரசு வாகனங்களை விடுவிக்க காவல் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் மணப்பாறையில் போலீசார் பிடித்து வைக்கப்பட்ட வாகனங்களை விடுவிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வாகனங்களை பிடித்து வைக்கும் போதே அந்த நபரின் முகவரி மற்றும் செல்போன் எண்களையும் போலீசார் குறித்து வைத்திருந்த நிலையில் நேற்று காலை முதல் இருசக்கர வாகனங்களை வழங்கத் தொடங்கினர்.

மணப்பாறை போக்குவ ரத்து இன்ஸ்பெக்டர் பாண்டிவேலு தலைமையில் போலீசார் ஒவ்வொருவராக அழைத்து இருசக்கர வாகனங்களில் ஆவணங்கள்சரியாக உள்ளதா? என்பதை ஆய்வு செய்த பின்னர் அந்த வாகனத்திற்கு பதிவு செய்யப்பட்ட வழக்கின் குற்ற எண் வாகனத்தின் முன்னும், பின்னும் எழுதி மீண்டும் ஊரடங்கு முடியும் வரை வெளியில் சுற்றக்கூடாது என்று அறிவுறுத்தி அனுப்பி வருகின்றனர்.

இந்த வாகனங்களை பொறுத்தவரை முதல் கட்டமாக கடந்த மாதம் 25-ந் தேதி முதல் 31-ந்தேதி வரை பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டு வருகிறது.