கைது 
செய்திகள்

மணப்பாறையில் லாரியை மறித்து டிரைவரிடம் பணம் பறிக்க முயன்ற 3 பேர் கைது

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் லாரியை மறித்து டிரைவரிடம் பணம் பறிக்க முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகிறார்கள்.

மாலை மலர்

மணப்பாறை:

மைசூரில் இருந்து மதுரைக்கு லாரி ஒன்று சென்று கொண்டிருத்தது. லாரியை கண்ணன் என்பவர் ஒட்டினார். லாரி திருச்சி மாவட்டம், மணப்பாறையில் கோவிந்தராஜபுரம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது லாரியை மறித்த 4 பேர் லாரி டிரைவரிடம் பணம் பறிக்க முயன்றனர். சுதாரித்துக்கொண்ட லாரி டிரைவர் இது பற்றி மணப்பாறை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். 

போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போது, 4 பேரும் ஓட்டம் பிடிக்க முயன்றனர். அதில் 3 பேரை போலீசார் பிடித்தனர். விசாரணையில் அவர்கள் மணப்பாறை சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 20), பூசாரிக்களத்தை சேர்ந்த விஜய்(22), பூமலைப்பட்டியை சேர்ந்த ஜேம்ஸ் (20) என்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து 3 பேரையும் கைது செய்த போலீசார், தப்பி ஓடிய சதீஸ்குமாரை தேடி வருகிறார்கள்.