திருவொற்றியூர்:
மணலி, ஜெ.ஜெ.நகரில் குடிநீர் தொட்டி உள்ளது. 2 நாட்களுக்கு ஒருமுறை டேங்கர் லாரிகளில் கொண்டு வரப்படும் தண்ணீர் குடிநீர் தொட்டியில் நிரப்பப்பட்டு அப்பகுதி மக்களுக்கு தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது.
இந்த குடிநீர் தொட்டியில் மூடி இல்லை. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக இந்த தண்ணீரை குடித்த சிலருக்கு வாந்தியும், உடல் நலக்குறையும் ஏற்பட்டது.
இன்று காலை குடிநீர் தொட்டியில்இருந்து கடும் துர்நாற்றம் வீசியது. சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் குடிநீர் தொட்டிக்குள் பார்த்தபோது பூனை ஒன்று இறந்து அழகிய நிலையில் கிடந்தது. அது 2 நாட்களுக்கு மேல் குடிநீர் தொட்டிக்குள் விழுந்து கிடப்பது தெரிந்தது.
இதுபற்றி அறிந்ததும் பெண்கள் உள்பட ஏராளமானோர் அங்கு திரண்டனர். முன்னாள் கவுன்சிலர் ஆறுமுகம் தலைமையில் மணலியில் உள்ள குடிநீர் வாரிய அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட் டனர்.
இதையடுத்து குடிநீர் வாரிய ஊழியர்கள் விரைந்து வந்து குடிநீர் தொட்டிக்குள் கிடந்த பூனையின் உடலை வெளியே எடுத்தனர். பின்னர் குடிநீர் தொட்டியை சுத்தம் செய்து மூடி அமைத்து சென்றனர்.