பிரதமர் மோடி, பியர் கிரில்ஸ், 
செய்திகள்

மோடியின் சாகச நிகழ்ச்சியை 1½ கோடி பேர் பார்த்தனர்: டிஸ்கவரி சேனல் அறிவிப்பு

பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்ட ‘மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சியை இதுவரை இல்லாத சாதனையாக 1½ கோடி பேர் பார்த்துள்ளதாக டிஸ்கவரி தெற்கு ஆசிய நிர்வாக இயக்குனர் மேகா டாடா கூறியுள்ளார்.

மாலை மலர்

கடந்த 12-ந் தேதி டிஸ்கவரி சேனல் பிரதமர் நரேந்திர மோடியும், பியர் கிரில்சும் கலந்து கொண்ட ‘மேன் வெர்சஸ் வைல்டு’ என்ற சாகச நிகழ்ச்சியை ஒளிபரப்பியது. இதுபற்றி டிஸ்கவரி தெற்கு ஆசிய நிர்வாக இயக்குனர் மேகா டாடா கூறியிருப்பதாவது:-

61 லட்சம் பார்வையாளர்களை கொண்ட டிஸ்கவரி சேனலில், ‘மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சியை இதுவரை அதிகபட்சமாக 37 லட்சம் பேர் தான் பார்த்துள்ளனர். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியை இதுவரை இல்லாத சாதனை அளவாக 1½ கோடி பேர் பார்த்துள்ளனர்.

முதல் ஒளிபரப்பு மற்றும் மறுஒளிபரப்புகள் என ஒட்டுமொத்தமாக அந்த நிகழ்ச்சியை இதுவரை 4.2 கோடி பேர் பார்த்துள்ளனர்.