சந்தேக நபர் கைது 
செய்திகள்

பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கேரளாவில் 2 பேர் கைது

பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கேரளாவில் பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாலை மலர்

திருவனந்தபுரம்:

தமிழகத்தில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக மத்திய உளவுத்துறை சமீபத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளது. அவர்கள் கோவையில் பதுங்கி, அங்கு தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் திடுக்கிடும் தகவல் வெளியானது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

இதைத்தொடர்ந்து, கோவை மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். அங்கு உச்சக்கட்ட போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

இந்நிலையில், கேரளாவில் பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 2 பேரை போலீசார் கைதுசெய்துள்ளனர். கைதான 2 பேரில் ஒருவர் பெண் ஆவார். இவர்களுக்கு லஷ்கர் இ தொய்பா இயக்கத்துடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் 2 பேரிடமும் தீவிர விசாரணை நடந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.