செய்திகள்

ஜார்க்கண்டில் கவுரவக்கொலை: பெற்ற மகளை கோடாரியால் வெட்டி கொன்ற தந்தை கைது

ஜார்க்கண்ட் மாநிலத்தில் வேறு சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை காதலித்த பெண்ணை கவுரவக் கொலை செய்த தந்தை, சகோதரரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ராஞ்சி:

ஜார்க்கண்ட் மாநிலம் சிங்பம் மாவட்டத்தைச் சேர்ந்த நியாதி மகாடோ என்ற பெண் பெங்காலியைச் சேர்ந்த வாலிபரை காதலித்து வந்துள்ளார். அவர்கள் காதலுக்கு நியாதி வீட்டார் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த திங்கட் கிழமை நியாதி தனது காதலனை அவர் வீட்டிற்கு சென்று சந்தித்தார். இதையறிந்த நியாதியின் தந்தை தனது மகனுடன் இணைந்து நியாதியை பின் தொடர்ந்தார். தனது காதலனுடன் பேசிக்கொண்டிருந்த நியாதியை அடித்து இழுத்து வந்து கோடாரியால் தாக்கி கொலை செய்தனர்.

இது தொடர்பாக இருவர் மீதும் வழக்கு தொடரப்பட்டது. இருவரும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நியாதியின் தந்தை தஸ்ரத் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.

காதலித்த குற்றத்திற்காக பெற்ற மகளையே கோடாரியால் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews

SCROLL FOR NEXT