செய்திகள்

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு

ஜம்மு - காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் நேற்றிரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார்.

மாலை மலர்

ஸ்ரீநகர்:

ஜம்மு - காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள சாபோர் பகுதியில் நேற்றிரவு சில பயங்கரவாதிகள் அத்துமீறி நுழைந்தனர். அவர்கள் அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதில் கணவன், மனைவி உட்பட இருவர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த மொகமத் அஷ்ரப் மிர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த மிர்ரின் மனைவி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.