சமராஜனகரா:
மைசூர் நகரின் தட்டாகல்லி பகுதியைச் சேர்ந்தவர் ஓம் பிரகாஷ். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். இவரது தந்தை நாகராஜ் பட்டாச்சாரியா ஒரு ஜோதிடர். ஓம் பிரகாஷ் தனது குடும்பத்துடனும் சில நண்பர்களுடன் கடந்த செவ்வாயன்று குண்டுல்பேட் மாவட்டத்தில் உள்ள ஒரு சொகுசுப் பங்களாவிற்கு சென்றுள்ளார். நேற்றிரவு அவரது நண்பர்கள் மைசூர் திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், இன்று காலை பங்களா அருகே உள்ள ஒரு வயல்வெளியில் ஓம் பிரகாசும் அவரின் குடும்பத்தாரும் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து போலீசார் தெரிவிக்கையில், ‘‘அதிகாலை 3 மணியளவில் தன் குடும்பத்தாரை வயல்வெளிக்கு அழைத்து சென்ற ஒம் பிரகாஷ் முதலில் தன் தந்தை மற்றும் தாயை துப்பாக்கியால் சுட்டுள்ளார். அதைத் தொடர்ந்து 8 மாத கர்ப்பவதியான தனது மனைவியையும், 4 வயது மகனையும் சுட்டுள்ளார்.
பின்பு தானும் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துள்ளார். தொழிலில் ஏற்பட்ட இழப்பு காரணமாகவும், மன
அழுத்தம் காரணமாகவும் அவர் இந்த முடிவு எடுத்திருக்கலாம். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது’’ எனக் கூறினர்.