கோப்புப் படம் 
செய்திகள்

டெல்லி மெட்ரோ ரெயில் நிலையத்தில் துப்பாக்கி குண்டுகளுடன் மர்ம நபர் கைது

டெல்லி மெட்ரொ ரெயில் நிலையத்தில் துப்பாக்கி குண்டுகள் வைத்திருந்த ஒரு நபரை மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.

மாலை மலர்

புதுடெல்லி:

பீகார் மாநிலத்தின் சம்பரான் மாவட்டத்தை சேர்ந்தவர் ரவிந்திர சிங். இன்று காலை டெல்லியில் உள்ள ஆனந்த் விகார் மெட்ரோ ரெயில் நிலையத்தில் துப்பாக்கி குண்டுகள் வைத்திருந்த குற்றத்திற்காக இவர் கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், “அவரிடமிருந்து 8 மி.மி காலிப்ரே வகை துப்பாக்கி குண்டுகள் கைப்பற்றப்பட்டன. ஆனால் அவரிடம் இதற்கான முறையான ஆவணங்கள் ஏதும் இல்லை. ஆயுத தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்றனர்.