செய்திகள்

உறவில் விரிசல்: கள்ளக்காதலியின் மகன் கழுத்தை நெரித்து கொன்ற வாலிபர் கைது

மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் கள்ளக்காதலியின் தொடர்பு கசந்ததால் அவரது 8-வயது மகனின் கழுத்தை நெரித்து கொன்ற 19 வயது வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மாலை மலர்

போபால்:

மத்தியப்பிரதேசம் மாநிலம் போபால் மாவட்டத்தில் உள்ள பைராகார் பகுதியைச் சேர்ந்த திருமணம் ஆன பெண்ணிற்கும் விஷால் ரூபானி என்ற 19 வயது வாலிபருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. விஷால் அந்த பெண்ணின் மகனுக்கு டியூசன் கற்றுக்கொடுக்க வீட்டிற்கு வந்த போது இந்த தொடர்பு ஏற்பட்டது. 

இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அந்த பெண் வாலிபரிடம் பேசாமல் இருந்துள்ளார். இதனால் கோபமடைந்த விஷால் நேற்று பள்ளிக்கு சென்று திரும்பி வந்துக்கொண்டிருந்த அந்த பெண்ணின் 8 வயது மகனை கடத்திச் சென்று கழுத்தை நெரித்து கொன்றார். 

சிறுவன் பள்ளிக்கு சென்று திரும்பி வராததால் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் விஷால் மீது சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்தனர். அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். 

இதற்கிடையில் சிறுவனின் உடல் முபாரக்பூர் பகுதிக்கு அருகில் கோணிப்பையில் சுற்றி கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. சிறுவனின் உடலை போலீசார் மீட்டனர். இதையடுத்து, விஷால் ரூபானியை போலீசார் கைது செய்து அவன் மீது கடத்தல் மற்றும் கொலை வழக்குப்பதிவு செய்தனர். #tamilnews