செய்திகள்

செல்பி மோகத்தில் 60 அடி பள்ளத்தில் தவறி விழுந்த இளைஞரை காப்பாற்றிய போலீசார்

உத்தரகாண்ட் மாநிலத்தில் செல்பி எடுக்கம் ஆர்வத்தில் 60 அடி பள்ளத்தில் தவறி விழுந்த இளைஞரை போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

டேராடூன்:

செல்பி மோகத்தால் சமீபத்தில் பல விபத்துகள் நடைபெற்றுள்ளன. இந்த விபத்துகளில் பல உயிர்சேதங்களும் ஏற்பட்டுள்ளன. பலர் படுகாயம் அடைந்து, கை, கால் உள்ளிட்ட உறுப்புகளையும் இழந்துள்ளனர். அதேபோன்ற ஒரு சம்பவம் இன்று உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்வார் மலை பகுதியில் பிரசித்தி பெற்ற மானசா தேவி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக இன்று ஒரு இளைஞர் வந்துள்ளார்.

மலையில் சென்று கொண்டிருந்த அவர் ஒரு கட்டத்தில் செல்பி எடுக்க முடிவு செய்துள்ளார். இதையடுத்து ஒரு பள்ளத்தின் விழும்பில் நின்று கொண்டு செல்பி எடுத்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கால் வழுக்கி சுமார் 60 அடி பள்ளத்தில் அந்த நபர் விழுந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. உடனடியாக அப்பகுதிக்கு விரைந்த போலீசார் உடனடியாக செயல்பட்டு அந்த நபரை பத்திரமாக அந்த பள்ளத்தில் இருந்து மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 

கோவுலுக்கு வந்த நபர் செல்பி எடுக்கும் மோகத்தில் பள்ளத்தில் விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT