மராட்டிய மாநிலம் மும்பை சென்ட்ரலில் இருந்து குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு செல்லும் குஜராத் மெயில் கடந்த 3-ஆம் தேதி இரவு 11.15 மணிக்கு போரிவிலி ரெயில் நிலையத்தை அடைந்தது.
அந்த ரெயிலில் அகமதாபாத்தை சேர்ந்த மகேஷ் அட்ரா, மும்பையில் முடிக்கவேண்டிய வேலையை முடித்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
போரிவிலி ரெயில் நிலையத்தில் நின்றதும், பிளாட்பார்மில் உள்ள கேண்டீனுக்கு சென்று தண்ணீர் பாட்டில் வாங்கினார் மகேஷ் அட்ரா.
கேண்டீனில் நூறு ரூபாய்க்கு சில்லறை தரும் சமயத்தில், ரெயில் புறப்பட்டு விட்டது. இதைக் கண்ட மகேஷ், ரெயிலை பிடிக்க விரைந்து வந்தார். ஒரு கையில் பாட்டிலுடனும், மறுகையில் சில்லறையுடனும் ஓடிவந்து ரெயிலில் ஏற முயன்ற அவர், நிலைதடுமாறி விழுந்தார்.
பிளாட்பார்முக்கும், ரெயிலுக்கும் உள்ள இடைவெளியில் சிக்கி தண்டவாளத்தில் விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார்.
இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக ரெயில்வே போலீசார் கூறுகையில், “ரெயிலுக்கும் பிளாட்பார்முக்கும் உள்ள இடைவெளியில் சிக்கி பலியாவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 2014-ல் 25 ஆகவும், 2015-ல் 28 ஆகவும் இருந்த பலி எண்ணிக்கை 2016-ல் 13 ஆக குறைந்துள்ளது.