செய்திகள்

மும்பை விமானத்தை கடத்துவதாக மிரட்டியவர் கொச்சியில் கைது

கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி நகரில் இருந்து இன்று மும்பைக்கு செல்ல இருந்த ஜெட் ஏர்வேஸ் விமானத்தை கடத்தப்போவதாக மிரட்டிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மாலை மலர்

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஜெட் ஏர்வேஸ் விமானமானது இன்று மதியம் 12 மணிக்கு மும்பை செல்ல தயாராக இருந்தது. இதற்கிடையே, விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு மேற்கண்ட விமானத்தை கடத்தப்போவதாக ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனையடுத்து, மிரட்டல் விடுத்த ஆசாமியை கைது செய்த போலீசார், விமானத்தில் தீவிர சோதனை நடத்தி ஆபத்தை விளைவிக்கும் எந்த பொருளும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டனர். இதனால், இரண்டு மணி நேரம் தாமதமாக விமானம் மும்பைக்கு புறப்பட்டுச் சென்றது.