நோய்களுக்கு பயந்து அசைவப் பிரியர்கள் பலர் சைவத்துக்கு மாறிவிட்டாலும், சிலருக்கு உணவில் அசைவம் இல்லாவிட்டால் சாப்பிட இயலாது. என்னதான் அசைவப் பிரியர்களாக இருந்தாலும் அதிகபட்சமாக ஒருவரால் அரை கிலோ இறைச்சிக்கு மேல் ஒரே நேரத்தில் சாப்பிட முடியாது.
ஆனால், பந்தயத்துக்காக ‘கிரில் மட்டன்’ என்றழைக்கப்படும் வெறும் சுட்ட ஆட்டிறைச்சியை தேனில் துவைத்து, இவர் சப்புக்கொட்டி சாப்பிடும் காட்சி, இவர் நவயுக பகாசுரனாக இருப்பாரோ.., என பார்ப்பவர்கள் வயிற்றில் புளியை கரைக்கிறது.
22 கிலோ எடையுள்ள முழு ஆட்டையும் விழுங்கி முடித்த பிறகும் திருப்தி அடையாத இந்நபர் எலும்பு இடுக்கில் ஒட்டிக்கிடக்கும் துணுக்களவு இறைச்சியையும் சோற்றுத்தட்டில் உதறி எடுத்து, ரசித்து சுவைக்கும் சுகமே அலாதியானது. #22KgMutton #Muttoneatingchallenge
இதை வீடியோ வடிவில் காண..,