கைது 
செய்திகள்

பெண் தீக்குளித்ததை வீடியோ எடுத்தவர் கைது

கொடைக்கானல் அருகே கீழ்மலை கேசிபட்டியில் பெண் தீக்குளித்ததை வீடியோ எடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலைப்பகுதி அருகே உள்ள கே.சி.பட்டி என்னும் பகுதியை சேர்ந்தவர் மாலதி ( 28). இவருக்கு திருமணமாகி கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தபோது, அதே பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. திருமணம் செய்து கொள்ளாமலேயே நெருங்கி பழகிய இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில் சதீஷூக்கு அவரது பெற்றோர் வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

அதனை அறிந்து ஆத்திரமடைந்த மாலதி, தனது குழந்தையுடன் சதீஷ் வீட்டுக்கு சென்று அவரிடம் தகராறு செய்தார். அதனைத்தொடர்ந்து தனது குழந்தையை அருகே இருந்த டீக்கடையில் அமரச் செய்து விட்டு, சதீஷ் வீட்டு வாசலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் மாலதி தீக்குளித்ததை வீடியோ எடுத்த சரவணக்குமார் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சரவணக்குமார் மாலதியை ஏமாற்றிய சதீஷின் அண்ணன் என்பது விசாரணையில் அம்பலமாகி உள்ளது.