செய்திகள்

டெல்லி மெட்ரோ ரெயிலில் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட நபர் கைது

புதுடெல்லி மெட்ரோ ரெயிலில் குடிபோதையில் பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

மாலை மலர்

புதுடெல்லி:

புதுடெல்லியில் கடந்த புதன் கிழமை மெட்ரோ ரெயிலில் பெண் ஒருவர் அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தார். ரெயிலானது நொய்டாவிற்கும் அக்‌ஷர்தாம் ரெயில் நிலையத்திற்கும் இடையில் சென்று கொண்டிருந்த போது அங்கிருந்த நபர் குடிபோதையில் அப்பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றுள்ளார். அவரிடமிருந்து தப்பித்து வெளியே வந்த பிறகும் அந்த பெண்ணை பின் தொடர்ந்து வந்துள்ளார்.

உடனே அந்த பெண் ரெயில் நிலையத்தில் இருந்த பாதுகாப்பு அலுவலரிடம் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து அந்த நபரை போலீசார் கைது செய்தனர். விசாரணை நடத்தியதில் அவர் பீகாரை சேர்ந்த மானு குமார்(வயது 40) என்பது தெரிய வந்தது. மேலும் குடிபோதையில் தவறு செய்ததாக மானு குமார் ஒப்புக் கொண்டுள்ளார்.

பெண்ணிடம் தகாத வார்த்தைகளால் பேசியது, பலவந்தப்படுத்த முயன்றது உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் மானு குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.