செய்திகள்

டார்ஜிலிங் நிலவரம் என்ன? - ராஜ்நாத் சிங்கிடம் மம்தா பானர்ஜி விளக்கம்

தனிமாநில கோரிக்கைக்காக போராட்டங்கள் நடைபெற்று வரும் டார்ஜிலிங் நிலவரம் குறித்து உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கிடம், மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி விளக்கினார்.

மாலை மலர்

புதுடெல்லி:

மேற்கு வங்காள மாநிலம் டார்ஜிலிங் மலைப்பகுதியை தனி மாநிலமாக்க கோரி கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா மற்றும் அதன் ஆதரவு கட்சிகள் தொடர்ந்து போராடி வருகின்றன. தொடர் போராட்டம் காரணமாக அங்கு இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை காரணமாக இதுவரை 5 பேர் உயிரிழந்து உள்ளனர். நாளுக்கு நாள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.

இந்நிலையில், உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை தலைநகர் புதுடெல்லியில் நேற்று சந்தித்த மேற்குவங்காள முதல்வர் மம்தா பானர்ஜி டார்ஜிலிங் நிலவரம் குறித்து விளக்கினார். வன்முறையை கட்டுப்படுத்த அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பற்றி தெரிவித்தார்.

ராஜ்நாத் சிங்கின் இல்லத்தில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது, மேற்குவங்காள மழை வெள்ள பாதிப்பு குறித்தும் மம்தா எடுத்துரைத்தார்.