செய்திகள்

அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் பாஜக அரசு ஈடுபட்டு வருகிறது - மம்தா குற்றச்சாட்டு

மேற்கு வங்காளத்தில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் மோடியும், அமித் ஷாவும் ஈடுபட்டுள்ளனர் என முதல் மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். #WestBengalPolice #CBIteamdetain #MamataBanerjee

மாலை மலர்

கொல்கத்தா:

மேற்கு வங்காள மாநிலத்தில் நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையே, நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த கொல்கத்தா மாநகர காவல் ஆணையர் ராஜீவ் குமார் வீட்டுக்கு சிபிஐ அதிகாரிகள் இன்று மாலை சென்றனர்.

அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், சிபிஐ அதிகாரிகளை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதுகுறித்து உள்ளூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து, கமிஷனர் வீட்டிற்கு வந்த சிபிஐ அதிகாரிகள் குழுவை போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கமிஷனர் வீட்டுக்கு சிபிஐ அதிகாரிகள் வந்ததை தொடர்ந்து, மாநில டிஜிபி, முதல் மந்திரி மம்தா பானர்ஜி மற்றும் மேயர் ஆகியோர் கமிஷனர் ராஜிவ் சுக்லா வீட்டுக்கு சென்று ஆலோசனை நடத்தினர்.

இந்நிலையில், மேற்கு வங்காளத்தில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் மோடியும், அமித் ஷாவும் ஈடுபட்டுள்ளனர் என முதல் மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் கூறுகையில், பிரதமர் மோடியின் அரசு மேற்கு வங்கத்தில் அராஜகத்தை பரப்புகிறது. அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் பிரதமரும் அமித்ஷாவும் ஈடுபட்டுள்ளனர்

நிதி நிறுவன மோசடியில் பாதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு பணம் திரும்ப வழங்கப்பட்டு உள்ளது. உலகத்திலேயே சிறந்த போலீஸ் அதிகாரியாக செயல்பட்டு வருபவர் ராஜிவ் சுக்லா என தெரிவித்துள்ளார். #WestBengalPolice #CBIteamdetain #MamataBanerjee