கொல்கத்தா:
உத்தரபிரதேசம், பீகாரில் நடந்த 3 எம்.பி. தொகுதி இடைத் தேர்தலில் பாரதிய ஜனதா தோல்வி அடைந்தது. உ.பி.யில் அந்த கட்சிக்கு ஏற்பட்ட தோல்வி கட்சியினர் இடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாரதிய ஜனதாவின் தோல்வி குறித்து மேற்கு வங்காள முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கூறும்போது, “முடிவின் ஆரம்பம் தொடங்கி விட்டது” என்று தெரிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:-
இடைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த சிறந்த வெற்றியாகும். அகிலேஷ் யாதவ், லாலுபிரசாத் யாதவ், மாயாவதி ஆகியோருக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு முடிவின் ஆரம்பம் தொடங்கி விட்டது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.